நடிகை மீரா மீதுன் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளித்திருந்தார். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேனாம்பேட்டை போலீசார் மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 19-ந்தேதி விசாரணைக்காக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி புகாருக்குள்ளான மீரா மீதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இதையடுத்து அவர் நிகழ்ச்சி முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராவதாக விளக்கம் அளித்து இருப்பதாக தெரிகிறது. மகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வனிதா விஜயகுமாரை தேடி பிக்பாஸ் அரங்கம் இருக்கும் இடத்திற்கு தெலுங்கானா போலீசார் வந்துள்ளனர். இதேபோல தேனாம்பேட்டை போலீசாரும் மீரா மீதுனிடம் விசாரணை நடத்த அங்கு செல்ல இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
Comments
Post a Comment