மற்றவர்களுக்கு உதவும் குணம் மக்களிடம் குறைந்து வருவதாக நடிகர் வடிவேலு கோவில் திருவிழாவின் போது வேதனையுடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோவில் திருவிழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இங்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 5 புரவிகளை கிராம மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த ஊர் நகைச்சுவை நடிகர் வடிவேலு மனைவின் சொந்தஊராகும்.
இதனால் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக வடிவேலு கலந்து கொண்டு இரவு நடைபெற்ற நாடகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், தண்ணீர் பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.
Comments
Post a Comment