கென்னடி கிளப் பெற்றுள்ள யூ சான்றிதழ்!

சுசீந்திரன் இயக்கியுள்ள  படம் கென்னடி கிளப்.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்  படத்திற்கு இசையை டி.இமான் அமைத்துள்ளார்.அதோடு, தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய கபடி குழுக்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு'U' சான்றிதழ் கிடைத்துள்ளது.

Comments