நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிக முக்கிய பதிவு! வாழ்த்தும் ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை அறிந்து தண்ணீர் பயன்பாடு, நிலத்தடி நீர் சேமிப்பு போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல பிரபலங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா,வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, பென்சில், மருது   போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா, சென்னை மற்றும் பிற நகரங்களில் நீர் நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தண்ணீர் பற்றாக்குறை குறித்த தகவல்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் "21 இந்திய நகரங்கள் 2020ல் தண்ணீரின்றி தவிக்கும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னை, இந்தியாவின் 6வது மிகப்பெரிய நகரம் என சிஎன்என் கூறுகிறது. தென்மேற்கு பருவமழையின் தற்போதைய மழை பற்றாக்குறை 38%-IMD....இந்தியா தனது நீர் நெருக்கடியை தீர்க்க வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ளது!!" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comments