ஒரு நாள் இரவு முழுக்க என்னுடன் உறுதுணையாக இருந்து என் மனைவியின் உயிரைக்
காப்பாற்றியவர்கள் உதயநிதி ஸ்டாலினும் இப்படத்தின் நாயகனும் மருத்துவருமான
தீரஜும்தான்’ என்று பொங்கி வந்த அழுகையை அடக்கமுடியாமல் கூறினார் பிரபல
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.போதை ஏறி புத்தி மாறி’ என்னும் வித்தியாசமான டைட்டில்கொண்ட படத்தை ரைஸ்
ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர்
இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர்
முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி
வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
செ
ன்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய
சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்,’
உதயநிதி சாரின் அத்தனை படங்களுக்கும் நான் தான் ஒளிப்பதிவு
செய்திருக்கிறேன். அவர் மூலமாகத் தான் எனக்கு இப்பட ஹீரோ தீரஜைத் தெரியும்.
என் மனைவி மாலாவுக்கு ஒரு முறை கடுமையான நோய் ஏற்ப்பட்டிருந்தபோது அந்த
இரவு முழுக்க உடனிருந்து என் மனைவியைக் காப்பாற்றினார்கள். இவர்கள்
இருவரும் அன்று உதவியிருக்காவிட்டால் என் மனைவி பிழைத்திருக்க வாய்ப்பே
இல்லை’என்று பேசியபோது தொடர்ந்து பேச முடியாமல் பொங்கி அழ, அவரை ஹீரோ தீரஜ்
தேற்றிக்கொண்டிருந்தார்.
Comments
Post a Comment