அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் குறித்தும், டீசர் மற்றும் டிரைலர் குறித்தும் ரசிகர்கல் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.இதற்கிடையே, இன்று மாலை படம் குறித்த அப்டேட் ஒன்று காத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி காலையிலேயே தகவல் கூறியதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதே சமயம், இந்த அப்டேட் டிரைலர் மற்றும் டீசர் குறித்தது இல்லை, என்றும் அவர் கூறியதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
இந்த நிலையில், படத்தில் இடம் பெறும் முக்கியமான பாடலான “வெறித்தனம்...” என்ற பாடலை விஜய் பாடப் போகிறார், என்பது தான் அந்த அப்டேட் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment