அனிருத் வெளியிடம் யோகிபாபுவின் கூர்கா’ பட டிரைலர்!

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கூர்கா’ பட டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருக்கிறார். சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
 
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது  ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்படம் வருகிற 12-ந் தேதி திரைக்கு வருகிறது.

Comments