தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிம்பு, இவருக்கு நடிப்பு, நடனம் ஆடுவது, மியூசிக், இயக்குனர், தயாரிப்பாளர், என பல திறமைகள் இருக்கிறது, அதேபோல் இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர், சிம்பு மீது பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள், சிம்பு நடிக்க இருந்த பல திரைப்படங்கள் கைவிடப்பட்டுள்ளன, ஏசி திரைப்படம் சிம்புவும் அசினும் நடிகை இருந்தார்கள், ஆனால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. அதே போல் சிம்புவும் நயன்தாராவும் கெட்டவன் திரைப்படத்தில் நடிக்க வந்தவர்கள் இந்த திரைப்படமும் கைவிடப்பட்டது.
சிம்பு அசின் நடிக்க இருந்த திரைப்படம் ‘ஏசி’ ஆனால் இந்த திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரை சென்றது, இந்த திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா தான் இயக்கியிருந்தார், ஆனால் பல காரணங்களால் சில பிரச்சினைகளாலும் இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி அதிக லைக்ஸ் பெற்று வருகிறது மேலும் சில ரசிகர்கள் இந்த படத்தில் இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே என வருந்துகிறார்கள்.
Comments
Post a Comment