தெலுங்கில் ஹிட் அடித்த ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகரான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டியர் காம்ரேட்.
பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். மேலும் கீ ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு மொழி ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதில் அதிரடி மாணவனாகவும், கிரிக்கெட் வீரராகவும் இருக்கும் தேவரகொண்டாவின் வாழ்வில் காதல் மலர்ந்த பிறகு நிகழும் நாயகன் சந்திக்கும் சவல்களை மையமாக கொண்டதே இந்த படத்தின் கதை என்பதை உணர்த்தும் வகையில் சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment