ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடங்கமறு' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'.  இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
 
படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று இப்படம் திரைக்கு வருகிறது.

Comments