4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் இன்று நேற்று நாளை, திருக்குமரன் எண்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடித்தார்கள். ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைத்திருந்தார்.
தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதன் கதை, திரைக்கதை வசனத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிகுமார் எழுதியுள்ளார். அவரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக் இயக்குகிறார். சி.வி.குமாரே மீண்டும் தயாரிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். இது டைம் மிஷின் கதை.
இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதில் சந்தீப் கிஷன் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் விஷ்ணு விஷாலும், கருணாகரனும் நடிப்பதாக அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். முதல் பாகத்தில் டைம் மிஷின் மூலம் பின்னோக்கி சென்றவர்கள். இந்த பாகத்தில் முன்னோக்கி செல்ல இருக்கிறார்கள்.

Comments
Post a Comment