சஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி.! அதற்கு விஜய் என்ன கூறினார்.

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர்.சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை பற்றி நடிகர் விஜயிடம் நடன இயக்குனர் ஷோபி உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன்  வளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.அவனுடைய விருப்பத்தின்படி கனவை நிறைவேற்றிக் கொள்ளட்டும் எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். 

Comments