சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரில் சீக்ரெட் போலீஸ் ஆபிஸராக இருக்கும் விக்ரம், வில்லன்களால் கடத்தப்படட அக்ஷராஹாசனை காப்பாற்ற செல்கிறார். இந்த நிகழ்வின் போது நடக்கும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Comments
Post a Comment