இந்திய அளவில் முதலிடத்தில் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக ட்ரெண்டிங் : செய்தியை மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களையே இரண்டாம் கலைஞர் என்று அழைக்காத தி.மு.க உடன் பிறப்புகள், மு.க ஸ்டாலினின் மகனும் கலைஞர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலினை பாசமாக மூன்றாம் கலைஞர் என்று அழைக்கின்றனர். திரைப்பட நடிகராக உள்ள இவர் தான் இன்றைய தி.மு.க இளைஞர் அணியின் தலைவர். இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில், ட்விட்டர் வாசிகள், #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்திய அளவில் முதலிடத்தில் இந்த ட்ரெண்டிங் உள்ளது. பொதுவாக இது போன்று ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்கும் தமிழ் வாசகங்களை தமிழக செய்தி ஊடகங்கள் பிரசுரிப்பது வழக்கம். ஆனால் இந்த ட்ரெண்டிங்கை தமிழக ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments