சாலையோர பிச்சை எடுக்கும் குழந்தைகளிடம் சிக்கிய ரகுல் பிரீத் சிங்!

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை என்பது மறுப்பதற்கில்லை.. அதேசமயம் மும்பையை சேர்ந்த அவர், அங்கே அந்த அளவிற்கு பிரபலம் இல்லை என்பதால் நினைத்த நேரத்தில் சுதந்திரமாக ஷாப்பிங் போவது, சுற்றித்திரிவது என விடுமுறை நாட்களில் பொழுதை போக்குகிறார்.

அப்படி சமீபத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்தி விட்டு சாலையில் நிறுத்தியிருந்த தனது காருக்கு செல்வதற்காக வெளியே வந்தார் ரகுல் பரீத் சிங். அப்போது வெளியே சாலையோரமாக பிச்சை எடுக்கும் குழந்தைகளின் கண்களில் ரகுல் ப்ரீத் சிங் பட, அவரை நடிகை என தெரியாமல் வழக்கமான ஒரு பணக்கார சீமாட்டி என நினைத்து அவர்கள் காசு கேட்டு சுற்றி வளைத்தனர்.

அவர்களை சமாளிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டு போனார் ரகுல். அவருக்கு உதவும் விதமாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் வந்து, குழந்தைகளிடமிருந்து அவரை விடுவித்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால் போவதற்கு முன் அந்த குழந்தைகளில் எவருக்குமே எதுவும் கொடுக்காமல் ரகுல் பிரீத் சிங் சென்று விட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Comments