Gorilla movie review : ஜீவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கொரிலா இந்த திரைப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ராதாரவி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் படத்தை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றிய அலசல்
கொரில்லா திரைப்படத்தில் நடிகர் ஜீவா சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார், திருட்டு வேளைகளில் தான் மட்டும் இல்லாமல் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு செய்து வருகிறார், படத்தில் ஒரு விவசாய மற்றும் ஜிம்பங்கி குரங்கு உடன் சேர்ந்து கொண்டு ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கிறார், இப்படி கொள்ளை அடித்த பிறகு இவர்களின் மனநிலை மாற திடீரென மாறுகிறது, இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் கிடைக்கிறது. அப்படி என்ன கோரிக்கை வைத்தார்கள்.? இவர்கள் எப்படி போலீசிடம் இருந்து தப்பிக்கிறார்கள் இவர்களின் கோரிக்கை நிறைவேறியதா.? என்பதுதான் படத்தின் கதை மேலும் படத்தில் மக்களின் பிரச்சினைகளையும் விவசாயிகளின் பிரச்சினைகளையும் வசனங்கள் நம்மளை சிந்திக்க வைக்கிறது.
படத்தில் ஜீவாவின் நடிப்பு வழக்கம் போல் அனைவரையும் கவர்ந்துவிட்டது மேலும் விவேக் பிரசன்னா, சதீஷ், ஜிம்பங்கி குரங்கு என அனைவரும் நடிப்பும் வெகுவாக மக்களை கவர்ந்து விட்டது மேலும் படத்தில் பல காமெடிகள் இவர்களுக்குள் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சாம் சி எஸ் இசை படத்திற்கு கூடுதல் பலம் தான், ஆர் பி குருதேவின் ஒளிப்பதிவும் ரூபனின் எடிட்டிங் பக்காவாக படத்திற்கு கை கொடுத்துள்ளது.
மேலும் கதையில் விவசாயம் பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் வசனங்கள் வைத்தது மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தை ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கலாம்.
கொரிலா : 2.5/5
Comments
Post a Comment