நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை அதிகரித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் என்பதால் கடந்த முறை எலிமினேஷன் இல்லை. இந்த வாரம் நிச்சயமாக எலிமினேஷன் இருக்க அதிக வாய்ப்புள்ளது அதிலும் கடந்த நாட்களில் நடந்த ஒத்திகை எவிக்ஷனில் ஹவுஸ் மேட்ஸின் நிலைப்பாடு அதீதமாக பிரதிபலித்தது எனலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யங்களுக்கும் சண்டைகளுக்கும் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்தது தான், இந்த நிலையில் கடந்த நாட்களின் நடந்த எவிக்ஷன் படி கவின், சாக்சி, மது, சேரன், மீரா உள்ளிடோரை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்திருந்த நிலையில்,
இவர்கள் அனைவரும் பிக்பாஸ் பிரதான கொள்கையான சண்டை சச்சரவுகளுக்கு தீனிப்போடுபவர்கள் எனலாம் இதற்கிடையில் எந்த வகையிலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் பாத்திமா பாபு தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
Comments
Post a Comment