தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாகசைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது. தமிழில் டாப் ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கன்னா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
Comments
Post a Comment