இந்தியா, இங்கிலாந்து போட்டியை ரசித்த வரலட்சுமி, பிந்துமாதவி!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியை நேரில் சென்று பார்த்து இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்கள் திரையுலக நட்சத்திரங்கள். இதற்கு முன் சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் இந்தியா, பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தனர்.

நேற்று நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணி இடையிலான போட்டியை நடிகைகள் வரலட்சுமி, பிந்துமாதவி ஆகியோர் நேரில் சென்று பார்த்து இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளனர். ஆனால், நேற்றைய போட்டியில் இந்தியா தோற்றுப் போய்விட்டது.

இங்கிலாந்து செல்லப் போவதாக சில நாட்களுக்கு முன்பே வரலட்சுமி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் கூடவே த்ரிஷாவையும் டேக் செய்திருந்தார். ஆனால், நேற்று அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களில் த்ரிஷா இல்லை, வரலட்சுமியும், பிந்துமாதவியும் மட்டுமே இருக்கிறார்கள்.
அடுத்து நடக்க உள்ள போட்டிகளைப் பார்க்க இன்னும் யார் யார் போகப் போகிறார்களோ...?

Comments