வந்தடைந்தார் வனிதாவின் மகள் ..! போலீசிடம் சொல்லப்போவது என்ன? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 
 
அதன் படி,  இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தெலுங்கானா போலீஸ், வணிதாவிடம் விசாரணை நடத்தினர்.  வனிதா மீது ஏற்கனவே அவருடைய இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜ், தன் மகளை கடத்தி சென்று விட்டார் வனிதா என வழக்கு பதிவு செய்து இருந்தார். இந்த  நிலையில், வேறு ஒருவரை நம்பி மகளை வெளியில் விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் வனிதா என்ற குற்றசாட்டை முன்வைத்து இருந்தார்.
 
இன்னும் சற்று நேரத்தில் ஜெனிதாவிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயுடன் வசிப்பதா.? அல்லது தந்தையுடன் வசிக்க விருப்பமா..? என ஒப்புதல் வாக்கு மூலத்தின் படியே ஜெனிதா யாருடன் வசிக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியும் என்ற தகவல் கிடைத்து உள்ளது. 

Comments