சினிமாவை விட்டு விலகுகிறேன் - அமீர்கான் மகள் அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் சைரா வாசிம்.பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிசில் மெகா ஹிட் அடித்து வசூலில் கல்லா நிரம்பி வழிந்த தங்கல் படத்தில் முக்கிய குத்துச்சண்டை வீராங்கனையாகவும் அமீர்கானின் மூத்த மகளாகவும் கீதா என்ற கதாபத்திரத்தில் பாத்திமா சனா ஷேக் என்பவர் நடித்திருந்தார். பாத்திமாவின் சிறுவயது  கீதாவாக சைரா வாசிம் என்பவர் நடித்திருந்தார்.  காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஆன இவரது நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றதுடன் அப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் வென்றார்.
 
தங்கல் படத்தை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்னும் படத்திலும் நடித்தார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இதனால் பாலிவுட் இயக்குனர்கள் அடுத்தடுத்து தங்கல் படங்களில் சைரா வாசிம் நடிக்க வைக்க வேண்டும் என முனைப்புடன் இருந்த நேரத்தில்,  தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு பாலிவுட் திரையுலகிற்கு அதிர்ச்சியளித்துள்ளார் சைரா வாசிம் .
 
இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள அவர், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்க்கையை மாற்றிக் கூடிய முடிவை எடுத்தேன். திரைத்துறையில் அறிமுகமான எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்பு, ஆடஹ்ரவு, புகழ் என அனைத்தும் கிடைத்தது. ஆனால் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இந்த வேலை எனக்கு ஒத்துவரவில்லை’.
 
இந்த வேலை மூலம் எனது இறை நம்பிக்கைக்கு இடையூராக இருந்து வந்தது. எனது மதத்திற்கும் எனக்குமான உறவை இந்த துறை கெடுத்துவிடுமோ என்ற அச்சம் எனக்குள் வந்துவிட்டது. எனினும், அதனை கடந்து எனது ஆத்மாவிற்கும்-மனதிற்கும் இடையிலான போராட்டத்தில் தோல்வியையே சந்தித்தேன். இதன் காரணமாகவே இனி சினிமாத்துறையில் என்னால் தொடர முடியாது.  மேலும்  சினிமா தன்னுடைய மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானதாக இருப்பதால் இந்த முடிவை நான் எடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comments