நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிராவல் டைரி என்ற தலைப்பில் தனது சுற்றுலா படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை நேற்று சமூகவலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. சென்னை நகரமே தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும்போது இந்த படம் தேவையா என்ற கேள்விகளும் எழுந்தன.இந்த காரணத்தால் அந்த படத்தை நீக்கிவிட்டார். அவர் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்.இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Comments
Post a Comment