வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: நடிகர் சீனிவாசனுக்கு முன்ஜாமீன்!

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், இதுதொடர்பாக நடிகர் சீனிவாசன் தாக்கல் செய்த மனு: திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் பாண்டி என்பவர் என் மீது வழக்கை கையாண்டு வருவதாகவும், அந்த வழக்கை நடந்துவதற்கான கட்டணத்தை வழங்குமாறு அவர் என்னிடம் கேட்டபோது, நான் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக மணப்பாறை காவல் நிலையத்தில் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 
மேலும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்து தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர்கள் குறிப்பிடும் வழக்கை நடத்த, பெங்களூருவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை நியமித்து அவருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் வழங்கிவிட்டேன். இந்நிலையில் பாண்டி என்பவர் என் மீது அளித்துள்ள புகார் பொய்யானது. எனவே மணப்பாறை காவல்நிலையத்தில் என் மீது போடப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி பி. ராஜமாணிக்கம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நடிகர் சீனிவாசன் இவ்வழக்கு விசாரணைகாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி, முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Comments