தியேட்டர்காரர்கள் மனைவி மாதிரி! டிஜிட்டல் படம் எடுப்பவர்கள் சின்ன வீடு மாதிரி! அபிராமி ராமநாதன் காட்டம்.!

நீங்கள் பவ் பவ் என்று சொன்னாலும் சரி பெளவ் பெளவ் என்று சொன்னாலும் சரி…இது நாய் குரைக்கும் ஓசை.!இப்படி ஒரு படத்தை முன்னாள் ஜெயந்தி பிக்சர்ஸ் அதிபர் குடும்பம் சார்ந்த கே.நடராஜன் செட்டியார் எடுத்திருக்கிற படம்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிராமி ராமநாதன் ,எடிட்டர் மோகன், பி.எல்.தேனப்பன்,,சித்ரா லட்சுமணன்,சத்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.அபிராமி ராமநாதன் பேசுகையில் தியேட்டர் அதிபர்கள் எதிர்கொள்ளவிருக்கிற அபாயங்களை சொன்னார்.
 
“தயாரிப்பாளர்கள்  அடுத்த மூணு மாசத்துக்கு டிஜிட்டலுக்கு கொடுத்து விடாதீர்கள். தியேட்டர்காரர்கள்தான் நீங்கள் தாலி கட்டிக்கொண்ட மனைவி. டிஜிட்டல் உங்களுக்கு ‘கீப் ‘சின்ன வீடு மாதிரி.நெட் பிளிக்ஸ் ,அமேசான்லாம் டிஜிட்டலில் இறங்கிவிட்டார்கள். தியேட்டர்களை வாழவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
 
விஞ்ஞான வளர்ச்சி என்று எத்தனையோ பேர் டிஜிட்டலுக்கு மாறியாச்சு. வெப் சீரிஸ்களும் வந்தாச்சு.!
எடிட்டர் மோகன் ( ஜெயம் ரவியின் அப்பா.) பேசுகையில்  மறக்க இயலாத சோக நிகழ்வை சொன்னார்.
“என்னை கே.ஏ தங்கவேலுதான் வளர்த்தார். 1957-ம் வருஷம்  அவருக்கு உடல் நலம் சரியில்ல.ஆஸ்பிடல்ல சேர்த்தாச்சு. எவ்வளவோ டிரீட்மென்ட் கொடுத்தாலும் வலி குறையல. ஸ்பெயின் நாட்டு நாய் ஒண்ணு வளர்த்தார்.அதுக்கு பேர் ஸ்பான்ஷி.!அவரை ஆஸ்பிடலுக்கு பிளைமவுத் காரில் கூட்டிட்டுப் போனப்ப அந்த நாய் கூடவே ஓடி ஆஸ்பிடல் போய் சேர்ந்திருச்சி.பெற மேல ஏறி அவர் உடம்பெல்லாம் பாசத்துடன் நக்கிது. அவரது பாசமான நாய்..தங்கவேலுவின் மனைவி ராஜாமணி அம்மாவுக்கும் அது பாசமான நாய். வீட்டுக்கு பிளைமவுத் கார்லேயே போயிருச்சு.
 
அடுத்த நாள் விடிஞ்சா   நாய் செத்திருச்சி.ஆஸ்பிடலில் தங்கவேலுவுக்கு உடம்பு வலியே இல்லை.டாக்டர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். தன்னுடைய உயிரை கொடுத்து அவரை காப்பாத்தியிருக்கு. வலியை நக்கியே எடுத்திருக்குன்னு நம்புனாங்க. அவங்க வீட்டுத் தோட்டத்திலேயே புதைச்சாச்சு. “என்று நினைவு கூர்ந்தார்.

Comments