ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் சூப்பர் ஹீரோ படம்: அக்ஷரா ஹாசனின் ஆசை!

கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். பாலிவுட்டில் ஷமிதாப் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் விவேகம் படத்தில் நடித்தார். தற்போது கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தில் நாசர் மகன் அபி ஹசன் ஜோடியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. எதிர்பாராமல் நடிகை ஆனேன். இப்போது நடிப்பின் மீது ஆர்வம் வந்து விட்டது. அதனால் இப்போதைக்கு இயக்குனர் கனவை ஒதுக்கி வைத்திருக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்தும் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. உடன் யார் நடிக்கிறார், ஜோடி யார் என்பதை பற்றி கவலை இல்லை. தமிழ் மொழி என்று இல்லை இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க ஆசை.
 
நடிகையாக ஜெயித்த பிறகு படங்கள் இயக்குவேன். அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. இதற்காக கதை எழுத முயற்சிக்கிறேன். அப்பா விதவிதமான கேரக்டரில் நடித்து விட்டார். எந்த கதை எழுதினாலும் அந்த கதை மாதிரி ஒரு படத்தில் அப்பா நடித்திருப்பார். அதுதான் பிரச்சினை.

 
அப்பா இதுவரை சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை. அப்படி ஒரு படம் இயக்க ஆசை. அந்தப் படத்தில் ரஜினி அங்கிளும் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ரஜினி அங்கிளும், அப்பாவும் இணைந்து நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களை இணைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் பாக்கியசாலி. என்கிறார் அக்ஷரா ஹாசன்.

Comments