அக்கா அக்கா என கூப்பிட்டு ஆப்பு வைத்த வனிதா..! போட்டுடைத்த பாத்திமாவின் கணவர்

தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு ஒரு வாரத்திற்கு பின் முதல் ஆளாய் வெளியேறினார். அதற்கு முன்னதாக ஒரு சிறப்பு பேட்டியில் பாத்திமாவின் கணவர் பாபு மற்றும் இரண்டு மகன்களும் பாத்திமாவுக்கு ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அப்போது, "பாத்திமா ஒரு குழந்தை மாதிரி அதனால்தான் நாங்கள் வீட்டில் பேபி என அழைப்போம்.
 
அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்வார்.. நாங்களும் அதற்கு விருப்பப்படுவோம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் சென்றபோது அவரை மிகவும் மிஸ் பண்ணோம்... காரணம் அவருடன் நினைத்தபோது பேசக்கூட முடியாது... உடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா இருப்பதால் அவருக்கு பக்கபலமாக இருப்பார் என நினைத்தோம். ஆனால் பாத்திமாவை அவர் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார். எங்கள் குடும்பத்தினருக்கு வனிதா பல ஆண்டுகளாகவே நல்ல பழக்கம்.
 
அப்போது வனிதா பாத்திமாவை அக்கா அக்கா என கூப்பிட்டு மிகவும் பாசமாக இருப்பார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பாத்திமாவிடம் வனிதா நடந்துகொண்டதை பார்க்கும் போது அப்போது இருந்த வனிதா இப்போது இல்லை என்பதை நன்குஉணர்த்தியது என தெரிவித்து இருந்தார் பாத்திமாவின் கணவர்.இதே விஷயத்தை தான், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பாத்திமாவும் கமலிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments