வடிவேலு மீது வழக்கு தொடர முடிவா?

பிரபல இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த படத்திற்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியையே தழுவியது. தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் வடிவேலுவை வைத்து மீண்டும் 24-ம் புலிகேசியை எடுக்க முடிவு செய்து அதற்காக வடிவேலுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக செட்டுகள் அமைக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.
 
இந்த படத்தை இயக்குனர் ஷங்கருடன் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்நிலையில், சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென வடிவேலு இந்த படத்தில் நடிக்க மறுத்தார். இதனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட் இதற்காக போடப்பட்ட செட் செலவு ஆகியவை வீணானது.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வடிவேலு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் தற்போது ஷங்கர் மற்றும் லைகா தரப்பில் இருந்து நடிகர் வடிவேலு மீது வழக்க தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பி உள்ளார். ஏற்கனவே கோர்ட், கேஸ் என அலைந்த அனுபவம் உள்ளதால் இந்த பிரச்சனையில் சமாதானமாக சென்றுவிட வடிவேலு முடிவு செய்துள்ள £ர். இதனால் இம்சை அரசன் பிரச்சனை முடிவுற்று விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments