பிகில்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியுள்ளது ஸ்கிரீன் சீன் நிறுவனம்.விஜய் நடிக்கும் 'பிகில்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கியுள்ளது. 'தெறி', 'மெர்சல்' படங்களை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ண்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. 'பிகில்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்த நிறுவனமே ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment