வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் பிரியா பவானி!

ரவிக்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ்,கருணாகரன் நடித்த படம், இன்று நேற்று நாளை. 2015ல் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம், தற்போது உருவாகிறது. படத்தை, எஸ்.பி.கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷால், கருணாகரன் நடிக்க, நாயகியாக ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சு நடக்கிறது. மாபியா படத்தில், நிவேதா பெத்துராஜ் நடிக்க வேண்டிய நிலையில்,ப்ரியாவுக்கு வாய்ப்பு சென்றது. அதேபோல், இன்று நேற்று நாளை - 2 பட வாய்ப்பும், மியா ஜார்ஜிடம் இருந்து,ப்ரியாவுக்கு கிடைத்துள்ளது.

Comments