தயாரிப்பாளருக்கு செலவு வைக்காத நடிகை மோனிகா!

சுசிந்தரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வெளியான படம் ஜீவா. இப்படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்திருந்தவர் மோனிகா. இவர் தோழர் வெங்கடேசன் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவுள்ளார்.சிறிய பட்ஜேட் படம் என்பதால் தன்னுடன் பலரை அழைத்து சென்று தயாரிப்பாளருக்கு செலவு வைக்காத மோனிகா, கடை கடையாக சென்று சோடா பாட்டில் போடும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

Comments