நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள்!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.
 
அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
 
இரவு நேர பார்ட்டியில் பாடல் அமையு
ம் என்பதை வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் உறுதிபடுத்துகின்றன. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். வித்யா பாலன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Comments