சம்பளத்தை உயர்த்தியுள்ள ராஷ்மிகா விளக்கம்!

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் நுழைந்து இப்போது தமிழுக்கும் வந்திருப்பவர் ராஷ்மிகா. தொடர்ச்சியாக தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவரின் அடுத்த படமான 'டியர் காம்ரேட்' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா. அது பற்றிய கேள்வியை சமீபத்தில் நடந்த 'டியர் காம்ரேட்' நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நீங்கள் மீடியாவில் வேலை பார்க்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை வேண்டும் என நினைப்பீர்கள். நானும் அது போலத்தான் நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய்யின் 64வது படத்திலும் நடிக்க உள்ளதாக பேச்சு வெளியாகி உள்ளது. அவர் நடித்துள்ள 'டியர் காம்ரேட்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜுலை 26ம் தேதி வெளியாக உள்ளது.

Comments