விஜய்-ன் பிகில் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்!!

விஜய்யின் பிகில் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்  அர்ச்சனா
அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'பிகில்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும்நடித்து வருகின்றனர். அதோடு தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார்.
 
ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம்  நிறுவனம் தயாரிக்கும் பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டதி து. இந்நிலையில் தயாரிப்பாளரான  அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய் படம் குறித்த முக்கிய தகவல் இன்று மாலை வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். அதோடு இந்த தகவல்  டீசர்,டிரெய்லர், மற்றும் பாடல்கள், ரிலீஸ் தேதி பற்றியஅறிவிப்பு அல்ல. அது நாம் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று. அது என்னவென்று கண்டுபிடியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments