அனுஷ்கா போல் ஏற்றுவாரா, ஏமாற்றுவாரா? கங்கனா!

அனுஷ்கா,  இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒப்புக்கொண்ட கதாபாத்திரத்துக்காக  உடல் எடையை கூட்டினார். 100 கிலோ வெயிட் போட்டு நடித்தார். அப்போது வம்பில் சிக்கியவர் இன்றுவரை மீள முடியவில்லை. கூட்டிய உடல் எடையை குறைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.   அனுஷ்காவுக்காகவே, பாகுபலி 2ம் பாகம் படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைத்து பின்னர் எடுத்தார் ராஜமவுலி. அப்போதும் உடல் எடை மெலியாததால் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் மெல்லிய தோற்றமாக மாற்றி அமைத்தனர்.

இதற்கு கோடிகளில் செலவிடப்பட்டது.  அனுஷ்காவின் நிலைமை தற்போது கங்கனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படமாக உருவாகும் ‘தலைவி’ படத்தில் நடிக்க கங்கனா ஒப்புக்கொண்டிருக்கிறார். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவின் 17 வயது இளமை பருவத்திலிருந்து இக்கதை தொடங்குகிறது. அரசியலுக்கு வந்த பின்னர் ஜெயலலிதா புஷ்டியான தோற்றத்துக்கு மாறினார்.

அவரைப்போல் தனது உடல் எடையை கூட்டி நடிக்க முடிவு செய்திருக்கிறார் கங்கனா. உடல் பருமன் ஆவதற்காக அதிக உணவு எடுத்துக்கொள்வதுடன் பல முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் எப்போதும் காட்சிதரும் கங்கனா தனது உடல் எடையை ஏற்றுவாரா அல்லது கிராபிக்ஸில் அனுஷ்கா தோற்றதை ஒல்லியாக்கி தேற்றியது போல் தனது தோற்றத்தையும் கிராபிக்ஸில் தேற்றி ஏமாற்றுவாரா என நெட்டிஸன்கள் கேட்டிருக்கின்றனர்.

Comments