ஹீரோக்களே செய்ய தயங்கும் பேக் டைவிங் சண்டை பயிற்சியை சாய் தன்ஷிகா அசால்டாக செய்து அசத்தியுள்ளார!

ஹீரோக்களே செய்ய தயங்கும் பேக் டைவிங் சண்டை பயிற்சியை நடிகை சாய் தன்ஷிகா அசால்டாக செய்து அசத்தியுள்ளார். பேராண்மை, அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தன்ஷிகா. கபாலி படத்தில் ரஜினியின் மகளாக யோகி எனும் ரோலில் நடித்தார். அதில் பெண் பேய்டு கில்லராக நடித்திருந்தார். தற்போது யோகிடா எனும் படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம் தான். இந்த படத்திற்காக சிலம்பம், வால் பயிற்சி என பல்வேறு தற்காப்பு கலைகளை அவர் கற்று வருகிறார். இந்த பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை அவர் அவ்வப்போது தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். இந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் தன்ஷிகாவை பாராட்டி ஊக்கப்படுத்துவர்.
 
இந்நிலையில் தன்ஷிகா இன்று வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் கடற்கரை மணலில் தனது பயிற்சியாளருடன் பேக் பல்டி (பின்பக்க கரணம்) பயிற்சி எடுக்கிறார் தன்ஷிகா. முதலில் இரண்டு முறை மட்டுமே அவரால் பேக் டைவிங் செய்ய முடிகிறது. அதன் பிறகு தொடர் பயிற்சியினால், தொடர்ந்து ஏழு முறை அவர் பேக் பல்டி அடிக்கிறார்.
பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் கூட இதுபோன்ற சண்டைக் காட்சிகளில் பேக் பல்டி அடிக்க டூப் தான் போடுவார்கள். லாங் ஷாட்டில் வைத்து ஹீரோவே அதை செய்வது போல் காட்டுவார்கள். ஆனால் நடிகை தன்ஷிகா, ஆக்ஷன் காட்சிகளுக்காக இத்தனை சிரமப்படுவதை ஸ்டன்ட் மாஸ்டர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்
 
முந்தைய காலங்களில் விஜயசாந்தி தான் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும ஒரே ஹீரோயினாக இருந்தார். ஆனால் இன்று நயன்தாரா, திரிஷா போன்ற உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்களும் ஹீரோக்களுக்கு நிகராக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் பெரும்பாலும், ரோப் கட்டிக்கொண்டும், டூப் பயன்படுத்தியும் தான் அவர்கள் சண்டை போடுகிறார்கள்.
முன்னணி ஹீரோக்களும், ஹீரோயின்களும் செய்ய தயங்களும் ஆக்ஷன் காட்சிகளை, நடிகை சாய் தன்ஷிகா அசால்டாக செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது உச்சக்கட்டம் படத்திலும் டூப் போடாமல், தானே ஒரு கட்டத்தின் பாடியில் இருந்து குதித்து நடித்தார் தன்ஷிகா. இதனால் அவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது.
 
அதில் இருந்து மீண்டு வந்து, தற்போது யோகிடா படத்துக்காக நிறைய சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். இப்படியே சென்றால், விஜயசாந்தி விட்டுச் சென்ற வெற்றிடத்தை தன்ஷிகா நிரப்பிவிடுவார் என்கின்றனர் ரசிகர்கள். டைரக்டர்ஸ் கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா.

Comments