பேட்டை நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை தமன்னா. அவ்வப்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து காமோக்‌ஷி என்ற படத்தில் நடித்தார்.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் நடிக்கும் போலே சுடியான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நவாசுதின் முதன் முறையாக தமிழ் படமான பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
 
நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இயக்கும் இந்தப்படத்தில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளார். இவர் பிரபல ஹிந்தி இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இப்படம் குறித்து தமன்னா கூறும்போது, ‘இந்தப் படக்கதை நன்றாக இருக்கிறது. இதில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பாலிவுட் படம் ஒன்றில் மல்டிலேயர் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது’ என்றார்.

Comments