தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, ஹிந்தி, ஹாலிவுட் என சென்னையின் பெருமையைப் பேசும் இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர்.ரஹ்மான். அவர் வருடத்திற்கு ஓரிரு தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தாலே அதிகம். பட எண்ணிக்கையை விட ஹீரோக்களையும், இயக்குனர்களையும் மையப்படுத்தி தான் அவருடைய பங்களிப்பு இருக்கும்.
வளர்ந்து வரும் நடிகர்களுக்கோ, சிறிய படங்களுக்கோ அவர் இசையமைப்பதில் என்ற குற்றச்சாட்டு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கமல்ஹாசனுக்கே 19 வருடங்கள் கழித்துதான் மீண்டும் இசையமைக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். 1996ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்', 2000ம் வருடத்தில் வெளிவந்த 'தெனாலி' படங்களுக்குப் பிறகு பெரிய இடைவெளிக்குப் பின் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இசையமைக்க சம்மதித்திருக்கிறார்.
கடந்த வாரம்தான் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை என்பதை அறிவித்தார்கள். மேலும், சிவகார்த்திகேயனின் 14வது படத்திற்கும், விஜய் நடிக்கும் 'பிகில்' படத்திற்கும் ஏஆர்.ரஹ்மான் தான் இசை. இந்த வருடத்தில் இதுவரை ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் 'சர்வம் தாள மயம்' படம் மட்டுமே வெளிவந்துள்ளது. ஏஆர்.ரஹ்மான் கைவசம் தற்போது 4 படங்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் மேலும் 'பிகில்' படம் மட்டுமே வெளியாகும். மற்ற படங்கள் அடுத்த வருடத்தில்தான் வெளிவரும்.

Comments
Post a Comment