திருவனந்தபுரம்: பட வாய்ப்பு தருகிறோம் பதிலுக்கு படுக்கையை பகிர்ந்து கொள்கிறாயா என கேட்பதாக நடிகை காயத்ரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.கேரள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காயத்ரி சுரேஷ். தமிழில் ஜிவி பிரகாஷ் உடன் 4 ஜி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தை வெங்கட் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான காயத்ரி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த காயத்ரி சுரேஷ், தன்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறினர். அதற்கு பதிலாக தயாரிப்பாளர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினார்.எஸ்எம்எஸ் அனுப்பி அழைக்கிறார்கள்
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ள தயாரா? என கேட்டு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பி அழைப்பதாகவும் காயத்ரி சுரேஷ் கூறினார். ஏற்கனவே சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.
ஏற்கனவே சினிமாத்துறையில் உள்ள பாலியல் தொல்லைகள் குறித்து மீடூவில் புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக சில இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் தனக்கும் பாலியல் தொல்லை இருப்பதாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மலையாள மாடல் ஒருவர் நடிகர் விநாயகன் மீது பாலியல் புகார் கூறினார்.தன்னையும் தனது தாயையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment