பிக் பாஸ் 3 - முதலில் நுழைந்து முதலில் வெளியேறிய பாத்திமா பாபு!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியி ஜுன் 23ம் தேதியன்று ஆரம்பமானது போது முதன் முதலில் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பாத்திமா பாபு. முதல் வாரத்தில் எந்தவிதமான எலிமினேஷன் இல்லை. இரண்டாவது வார முடிவில் நேற்று முதன் முதலில் வெளியேறியவராக பாத்திமா பாபு இருந்தார்.
நிகழ்ச்சியில் முதலில் நுழைந்து, முதலில் வெளியேறியவர் என்ற பெயரைப் பெற்றார் பாத்திமா பாபு. கடந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சேரன், பாத்திமா பாபு, சரவணன், சாக்ஷி, மீரா மிதுன், கவின், மதுமிதா ஆகிய 7 பேர் இருந்தார்கள். அவர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவர்களில் முதலிடத்தில் இருந்த மதுமிதா சனிக்கிழமையன்று முதலில் காப்பாற்றப்பட்டவராக இருந்தார். அடுத்து நேற்று இரண்டாவதாக காப்பாற்றப்பட்டவர்களில் கவின் இடம் பெற்றார்.
 
தொடர்ந்து பிக் பாஸ் லோகோவான கண் வடிவத்தை இரு பாதியாக கத்தரித்து அட்டை வடிவில் மீதமுள்ளவர்களிடம் கொடுத்து எந்த இரண்டு பொருந்துகிறதோ அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். அதில் சரவணன், மீரா மிதுன் ஆகியோரதும், சேரன், சாக்ஷி ஆகியோரதும் பொருந்தியது. பொருந்தாத பாதி அட்டையை வைத்திருந்த பாத்திமா பாபு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 
பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பாத்திமா பாபு, வீட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதில் வனிதா தான் காரணமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். அடுத்து இந்த வார தலைவர் பதவிக்காகப் போட்டியிட அபிராமி, சாண்டி, தர்ஷன் ஆகியோரை பாத்திமா தேர்வு செய்தார்.
பெரிய பிரச்சினைகள் எதிலும் சிக்காத பாத்திமா பாபு முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஆச்சரியம்தான். வீட்டிற்குள் சமைப்பத்தில் சிறந்தவராக அவர் ஒருவர்தான் இருந்தார். இனி, பிக் பாஸ் வீட்டிற்கள் சுவையான சாப்பாட்டை சாப்பிடுவதற்க போட்டியாளர்களுக்குக் கொஞ்சம் திண்டாட்டம்தான் இருக்கும்.

Comments