ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ் ஆகியோருடன் காங் என்ற சிம்பன்சி குரங்கும் நடித்த படம் கொரில்லா. சிம்பன்ஸி குரங்கை வைத்து திருடும் கதை. இதனை டான் சாண்டி இயக்கி உள்ளார். சாம் சி.எஸ்.இசை அமைத்துள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி விட்டது. தமிழ்நாடு முழுவதும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. டி.வி உரிமம் விற்பனையாகி விட்டது. கடந்த ஜுன் 21ந் தேதி வெளிவருவதாக இருந்த படம், வருகிற 5ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 5ந் தேதி ஜோதிகாக நடித்த ராட்சசி, விமல் நடித்த களவாணி 2 படங்கள் வெளிவருகிறது. அதுமட்டுமல்ல கொரில்லா சிறுவர், சிறுமிகள் கண்டு ரசிக்கும்படியான ஒரு கதை. ஆனால் 5ந் தேதி ஸ்பைடர் மேன் படம் வெளிவருகிறது. இதனால் கொரில்லாவின் டார்கெட் ஆடியன்ஸ் ஸ்பைடர்மேனுக்கு சென்று விடும் வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்த 3 படங்களுடன் மோத விரும்பாமல் வழிவிட்டு விலகி இருக்கிறது கொரில்லா. ராட்சசி, களவாணியுடன் இந்த வாரம் காதல் முன்னேற்ற கழகம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.

Comments
Post a Comment