வெளியானது ‘களவாணி 2’! – அரசியல் ஏரியாவில் பரபரப்பு !

சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘களவாணி 2’ படம் வெளியாக சில தடைகள் உருவானாலும், அத்தனையையும் சமாளித்து இன்று (ஜூலை 2) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
 
முழுக்க முழுக்க உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து சற்குணம் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராவன்னா என்ற கதாபாத்திரத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியிருந்த நிலையில், ரிலீஸுக்காக படக்குழு ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, போஸ்டர்களை கடந்து செல்பவர்கள் சில நிமிடங்கள் நின்று பார்க்கும் அளவுக்கு மக்களை ஈர்த்து வருகிறது.
 
களவாணிகள் முன்னேற்ற கழகம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களில் சுமை தாங்கி மகளிர் குழு தலைவியான ஓவியாவின் தலைமையில் கூட்டம் நடப்பதாகவும், ராவன்னா என்ற வேடத்தில் நடித்திருக்கும் வில்லன் நடிகர் துரை சுதாகர் முன்னிலை வகிக்க, அறிக்கி என்ற வேடத்தில் நடித்திருக்கும் விமல் சிறப்புறை ஆற்ற இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.
இப்படி பலவிதமான அரசியல் பார்மெட்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களே இப்படி ரசிகர்களை கவர்கிறது என்றால், நிச்சயம் ‘களவாணி’ யை விட ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் படமாக ‘களவாணி 2’ இருக்கும் என்ற பேச்சும் அடிபட தொடங்கிவிட்டது.

Comments