வாகைசூடவா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதில் இடம்பெற்ற சர சர சாரக்காத்து.பாடலின் மூலம் கமல்ஹாசனின் நம்பிக்கையை பெற்று அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார். அவரின் விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது இசை அமைத்துள்ள கடாரம் கொண்டான் அவருக்கு 25வது படம்.
இது தவிர வத்திக்குச்சி, குட்டிபுலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், அமரகாவியம், மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சதன் போன்றவை ஜிப்ரான் இசை அமைத்த முக்கியமான படங்கள். சில தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜிப்ரான் முறைப்படி இசை கற்றவர். அடிப்படையில் கீ போர்ட் பிளேயர். சொந்தமாக சென்னையில் ரிக்கார்டிங் தியேட்டர் கட்டி அதன் மூலம் சுமார் 700 விளம்பர படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதன் பிறகு சினிமாவுக்கு வந்தார். தற்போது 25 படங்களை நிறைவு செய்து விட்டார்.
Comments
Post a Comment