தற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும். அதிலும் ரஜினி ,கமல் ,விஜய் ,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் சம்பளம் அவர்கள் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டில் பாதி அளவு இருக்கும் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித்த போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒரே ஒரு படம் நடிப்பதால் அவர்களின் சம்பளம் படத்தின் பட்ஜட்டில் இருந்து ஒரு பகுதியே ஒதுக்கும் நிலை தான் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்று தற்போது ஒரு விவரம் வெளியாகியுள்ளது.
அதில் நாம் எதிர்பார்த்தது போலவே ரஜினி அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பாதி இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார். இதோ அந்த பட்டியல்
- ரஜினிகாந்த் – 60 கோடி
- விஜய் – 40-45 கோடி
- அஜித்குமார் – 30-40 கோடி
- சூரியா -30 கோடி
- கமல்ஹாசன் – 25-30 கோடி
- விக்ரம் -15 கோடி
- சிவாகார்த்திகேயன் -15 கோடி
- விஜய் சேதுபதி – 7-10 கோடி
- தனுஷ் -10 கோடி
- ஜெயம் ரவி – 09 கோடி
- கார்த்தி – 07 கோடி
- சிம்பு – 06 கோடி
- ஆர்யா – 05 கோடி
- விஷால் – 05 கோடி
- ஜீவா – 03 கோடி
- சத்யராஜ் – 02 கோடி
- பிரகாஷ்ராஜ் – 01 கோடி
Comments
Post a Comment