அஜித் சம்பளம் 100 கோடியா? : போனி கபூர் பதில்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, பிங்க் படத்தின் தமிழ் மறுதயாரிப்புகில் நடித்து முடித்துள்ளார் அஜித். இப்படத்தின் பட விளம்பரம் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.இந்தப் படத்தில் பணிபுரிந்ததை அடுத்து அஜித்துக்கும் போனி கபூருக்கும் இடையில் நல்லுறவு உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்ததாகவும் போனி கபூர் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த 3 படங்களுக்கும் சேர்த்து அஜித்துக்கு 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.ஆனால் இதை மறுத்த போனி கபூர் ‘3 படங்களில் அஜித்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி உண்மையில்லை. இந்தப் படத்துக்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேம். மேலும் அவர் இந்தியில் ஒருப் படம் நடிக்க வேண்டுமென நான் கூறியுள்ளேன். ஆனால் அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

Comments