காமோஷி இந்திப் பட கேரக்டர் ரொம்பவும் சவாலானது: தமன்னா!


நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா இயக்கத்தில் கமோஷி என்ற இந்திப் படத்தில் நடித்ததை பெருமையாக கருதுவதாக நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:காமோஷி படத்தின் கதையைக் கூறி, அதில் காது கேட்காத-வாய் பேச முடியாத ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் அதென்ன பிரமாதம் என நடிக்க ஒப்புக் கொண்டேன். அதன் பின், படபிடிப்புத் தளத்துக்குச் சென்று, அப்படியொரு கேரக்டரில் நடிக்கும்போதுதான், அது எவ்வளவு சவாலானது என்பதை உனர்ந்து கொண்டேன்.
 
 படபிடிப்பு நடக்கும்போது, அந்த கேரக்டரில் நடிக்கும் என்னுடைய நடிப்பு எவ்வளவு தூரம் ஒரிஜினல் போலவே இருக்கிறது என்பதை சோதித்து அறிவதற்கென்றே படபிடிப்புத் தளத்தில் ஒருவர் இருப்பார். அவர் நடிப்பு முழுவதையும் பார்த்து விட்டு ஓகே சொன்ன பின் தான், அடுத்த காட்சிக்கே போக முடியும். அப்படியொரு நம்பகத்தன்மையோடு காட்சிகள் படமாக்கப்பட்டன. துவக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப் போக, அந்த சவாலான கேரக்டரில் நடிக்க எனக்கே பிடித்து போனது.

அப்படிப்பட்ட எந்த சவாலான கேரக்டர் இனி எனக்கு வந்தாலும், அதில் தயக்கமில்லாமல் ஏற்பேன்.சினிமாவில் எனக்கு ஸ்ருதி ஹாசன் மிக நெருங்கிய தோழி. இருவரும் சந்தித்துக் கொண்டால், சினிமா குறித்து ஒரு வரி கூட பேச மாட்டோம். வாழ்க்கையைத்தான் பேசுவோம். தனுஷ், ராணா, காஜல் அகர்வால் என, சினிமாவில் எனக்கு நிறைய தோழிகளும்; நண்பர்களும் உண்டு. இதில் ராணா மிக மிக நல்லவர். எல்லோருக்கும் உதவிடம் எண்ணம் அவருக்கு இயற்கையிலேயே வாய்த்திருக்கிறது.இவ்வாறு அவர் பேட்டியளித்திருக்கிறார்.

Comments