அஜித் நடித்த ‘விஸ்வாசம்‘ படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. அதில் ஒரு படத்தை துரைசந்திரசேகர் இயக்க தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ‘தனுஷ் 35’ திரைப்படத்தை ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment