கணவர் ஆர்யாவுடன் செம்ம மார்டனாக நைட் அவுட் சென்ற சாயிஷா!

நடிகை சாயிஷா  திருமணத்தை தொடர்ந்தும், சமந்தா பாணியை பின்பற்றி வருகிறார்.  குறிப்பாக நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிப்பது போலவே, சாயிஷாவும் தற்போது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து, டெடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இருவரும் வெளிநாடு சென்றுள்ளார். அப்போது கணவர் ஆர்யாவுடன், நைட் அவுட் சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.

இந்நிலையில் இவர்கள் இருவரும்,  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில்,  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'டெடி' படத்தில்  மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு  தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள இருவரும் டின்னருக்காக நைட் அவுட் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்பததை சாயிஷா வெளியிட்டுள்ளார். 

Comments