மகாநதி படத்திற்கு பிறகு தான் தென்னிந்திய சினிமாவில் மெகா பர்பாமென்ஸ் நடிகையாகி விடுவோம் என்றுதான் எதிர்பார்த்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படத்தில் நடித்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தபோதும் அதன்பிறகு படவாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.அதனால் வாய்ப்புத்தேடி ஆனால் அந்த போட்டோவில் அவரது பழைய அழகையே காணவில்லை. இதனால் குண்டு கீர்த்தி சுரேசை ரசித்து வந்த ரசிகர்கள், இந்த ஸ்லிம் கீர்த்திசுரேஷ் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி அவருக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.
பாலிவுட்டிற்கு சென்றவர் போனிகபூர் தயாரிப்பில் அஜய்தேவ்கன் நடிக்கும் படத்தில் அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் ஸ்லிம்மாக வேண்டும் என்று சொன்னதை அடுத்து மூன்று மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி என்று வெயிட் குறைத்து இப்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.அதையடுத்து அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது வெளிநாட்டில் தான் எடுத்துள்ள ஒரு புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment