மனிதர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடியது போரடித்துள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முந்தைய தனது பிறந்த நாளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுடம் கொஞ்சிக் குலாவி உற்சாகமாகக் கழித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்,
கடந்த ஜூன் 19-ஆம் தேதி நடிகை காஜல் அகர்வால் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார் இதற்காக துபாயில் உள்ள தனியார் பூங்காவிற்கு சென்று அங்கே 500க்கும் தனியார் விலங்குகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மான், ஒட்டகம், கரடி குட்டி போன்ற விலங்குகளுக்கு தனது கையால் உணவளித்து உள்ள காஜல் அங்கு இருக்கும் இரண்டு அரிதான வெள்ளை சிங்கங்களுடன் கூண்டுக்கு வெளியே ஓடியவாறு விளையாடி உள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.
Comments
Post a Comment