டபுள் ரோலில் அனுஷ்கா: ஒரு மொழியில் ஹிட்டாகும் படம் மற்றொரு மொழியில் ரீமேக்!

ஒரு மொழியில் ஹிட்டாகும் படம் மற்றொரு மொழியில் ரீமேக் ஆகிறது. நடிகை அனுஷ்காவின் கவனம் தற்போது உள்ளூர் மொழியிலிருந்து வெளி நாட்டு மொழிப் படம் மீது திரும்பியிருக்கிறது. உடல் எடை அதிகரித்ததால் கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமலிருந்த அனுஷ்கா தற்போது ‘நிசப்தம்’ த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். ஹேம்நாத் மதுக்கர் இயக்கும் இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் அனுஷ்கா.

அதற்காக நிறைய ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார். இயக்குனர் ஒருவர் அனுஷ்காவிடம் ஸ்பேனிஷ் மொழி பட ஸ்கிரிப்ட் ஒன்றை சொல்லி இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறினார். அது அனுஷ்காவை கவர்ந்தது. ஜூலியாஸ் ஐஸ் என்ற இப்படத்தில் நடிக்க அனுஷ்கா ஓ.கே சொல்லியிருக்கிறார். டபுள் ரோலில் அனுஷ்கா நடிக்கவுள்ள இப்படம் பழிவாங்கும் கதையாக உருவாகவிருக்கிறது.

Comments